மகான்கள் நம் கனவில் வருவதுற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் . அந்த கனவு நனவாகும் போது கிடைக்கும் மகிழ்சிக்கு அளவே கிடையாது .
இந்த கணவன் மனைவிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நேரத்தில், ஒரு நாள் அந்த மனைவியின் கனவில் பரமாச்சார்யார் வருகிறார். அவர்கள் வீட்டிற்குள் வந்து எல்ல இடத்தையும் பார்த்து விட்டு, பூஜை அறையும் பார்த்து விட்டு வெளியே செல்கிறார்.
அச்சமயம் , அந்த பெண் ஆசார்யரிடம், என் குழந்தையை பார்த்து ஆசீர்வாதம் பண்ணுங்கோ என்கிறார். அதற்கு, மகான், நீ குழந்தையை அங்கே கொண்டு வா என்கிறார் . அத்துடன் கனவு கலைகிறது..
அது முதல் , அந்த பெண்மணிக்கு காஞ்சிபுரம் சென்று ஆசார்யாராய் தரிசனம் செய்ய வேண்டும் என்று தவிப்பு.
தன கணவனுடன், குழந்தையை எடுத்து கொண்டு, காஞ்சிபுரம் சங்கர மடம் செல்கிறார். அங்கு ஆச்சர்யாளை பார்க்க காலையில் பெருங் கூட்டம். . கையிலோ மூன்று மாத குழந்தை. இருப்பினும் அந்த பெண்மணி மனம் தளரவில்லை . எவ்வளவு நேரமானாலும் பெரியவாளை தரிசனம் செய்யாமல் செல்வதில்லை என்ற முடிவோடு குழந்தையுடன் அங்கேயே அமர்கிறார். மாலை வருகிறது .. ஆசார்யாள் தரிசனம் ஆரம்பம்.
அப்பொழுது, ஒரு அணுக்க தொண்டர் ஒருவர், அந்த பெண்மணியிடம், குழந்தையை பெரியவாளிடம் கொடுக்க சொல்கிறார். பெரியவா அந்த மூன்று மாத குழந்தையை தன் மடியில் வைத்து கொண்டு வைத்து கொண்டு, கொழந்தைக்கு பெயர் வைச்சாச்சா என்று கேட்கிறார். இல்லை என்கிறார் அந்த தாய். அப்படி என்றால் இவளுக்கு காமாக்ஷி என்று பெயர் வை என்கிறார். அதற்கு அந்த பெண்மணி, என்னுடைய பெயர் காமாக்ஷி என்கிறார். பிறகு மகான், அப்படினா இவளுக்கு ” அனுஷா ” என்று பெயர் வை என்கிறார் . மகான் திரு வாயால் பெயர் பெற்ற குழந்தை . தன்னிடம் 20 -30 நிமிடங்கள் வைத்து கொண்டு பிறகு குழந்தையை தாயிடம் திரும்ப கொடுக்கிறார்.
மகான் தன மடியில் குழந்தையை வைத்து கொண்டு இருப்பதை பார்த்ததில் அங்கு கூடி இருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யம். அப்பொழுது , அந்த பெண்மணிக்கு, மகான் கனவில் வந்து, ” கொழந்தையை அங்கே கொண்டு வா ” என்று சொன்னதின் அர்த்தம் விளங்கியது.
மஹா பெரியவரை தரிசனம் செய்வதற்கே ஒரு கொடுப்பினை வேண்டும். அவரிடம் ஆசி பெறுவதற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
எங்கும் நிறைந்த அந்த பரப்ருமம் மடியில் இருக்க அந்த குழந்தை செய்த தவம் யாரறிவார் !! அந்த பரப்ருமமே அறியும் !!
