
மகாபெரியவாள் சிவாஸ்தானத்தில் தங்கியிருந்தார்கள். அங்கிருந்த ஸ்ரீ பிரம்மபுரீஸ்வர்ர் ஆலயத்துக்கு அப்போதுதான் பெருமை வந்த்து. பிரும்ம ஸ்வரூபியான் பெரியவாளைத் தரிசிக்க வந்த அடியார்கள் எல்லாரும் பிரும்மபுரீஸ்வர்ரையும் நிச்சயமாகத் தரிசனம் செய்தார்கள்.
நாங்கள் பெரியவாளைத் தரிசனம் செய்யச் சென்றிருந்தோம். அன்றைக்குப் பெரியவா, மௌனம் ! ஆனால். அவர்களுடைய அருட்பாரிவையே பக்தர்களுக்குப் போதுமானதாக இருந்த்து.
அந்த்ச் சமயம் பார்த்து, இந்தோனேஷியாவிலிருந்து ஒரு சரித்திர ஆராய்ச்சியாளர் தரிசனத்துக்கும், சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கவும் வந்தார்.
நல்லகாலமாக, அன்றைக்குக் காஷ்ட மௌனம் இல்லை; கைகளால் ஜாடைகள் காட்டினார். அதை விவரித்துச் சொன்னார், அணுக்கத் தொண்டர்.
அவருக்குச் சரித்திர ஞானம் – அதுவும், இந்தோனேஷிய சரித்திரம் ! – இல்லவேயில்லை.
நான் மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியராதலால், தொண்டர் கூறியதை மேலும் தெளிவாக ஆங்கிலத்தில் கூறி வந்தேன்.
இந்தோனேஷியா என்பது அநேகம் தீவுகளின் தொகுதி. அவற்றில், ஒரு தீவில், ஒரு இந்து மன்னர் நட்த்திய யாகத்தைப் பற்றி மிகவும் ஆர்வத்துடன் கூறினார், அந்த ஆராய்ச்சியாளர்.
“யாகம் நடந்த தீவின் பெயர் என்ன?” என்று ஜாடை மூலமாகவே பெரியவா கேட்டார்கள்.
ஆராய்ச்சியாளருக்குத் தெரியவில்லை, நூற்றுக்கணக்கான தீவுகளின் பெயரை நினைவில் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை என்றாலும், சில முக்கியமான் தீவுகளின் பெயர்களைக் கூறத் தொடங்கினார். அவர் ஒன்றொன்றாகத் தீவின் பெர்யரைச் சொன்னதும், ‘அது இல்லை’ என்ற பாவனையில் பெரியவா தலையை அசைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆராய்ச்சியாளருக்கே அலுப்பு வந்துவிட்ட்து. “நூற்றுக்கணக்கான தீவுகள் இருக்கும்போது, அவைகளின் பெயர்கள் பெரியவாளுக்கு மட்டும் தெரிந்திருக்கப் போகிறதா என்ன?” என்ற எண்ணமும் தோன்றியிருக்க்க் கூடும்.
பெரியவா, பக்தர்களின் கூட்ட்த்தில் பார்வையைச் செலுத்தினார். பின், தன் செவியின் கீழே, கைவிரல்களை வட்டமாக வைத்து, ‘என்ன பெயர்?’ என்று கேட்பது போல ஜாடை காட்டினார்கள்.
ஒருவர், “குண்டலம்” என்று மெல்லிய குரலில் கூறினார்.
பெரியவா, ‘அதுதான்! .. அவனிடம் சொல்லு …’ என்று ஜாடை காட்டினார்கள்.
அங்கு நடப்பதையெல்லாம் விந்தையுடன் பார்த்துக் கொண்டிருந்த இந்தோனேஷிய ஆராய்ச்சியாளரிடம், ‘குண்டலம்..” என்ற சொல் இரைந்து கூறப்பட்ட்து.
ஒரு துள்ளு துள்ளினார், அவர்.
“ஆமாம்! அந்த யாகம் நடந்த தீவின் முதற்சொல் குண்டலம் தான்!” என்று பக்தர்களிடம் கூறிவிட்டு, பெரியவாளிடம் முழுப் பெயரையும் தெரிவித்தார்.
பெரியவா புன்னகைத்தார். ஆராய்ச்சியாளருக்கு மகா ஆச்சரியம் ! தன்னுடன் வந்திருந்தவர்களிடம், அவர்கள் மொழியில் தன் வியப்பை வெளிப்படுத்திப் பேசி, பெரியவாளின் பூகோள ஞானத்தைப் பெரிதும் போற்றினார்.
ஆனால் பக்தர்களுக்கெல்லாம் உண்மை தெரியும். பெரியவா, ஞானக் களஞ்சியம்; ஞான ஊற்று; அனைத்து ஞான்ங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ரத்தினப் பெட்டகம்.
ஆசிரியனான எனக்கு நன்றாகவே புரிந்த்து – ‘இது, வெறும் படிப்பு அறிவு அல்ல !”
இந்த அதிசய நிகழ்ச்சி நடந்தபோது நாங்களும் அதைக் காணக் கிடைத்த்து, எங்கள் பாக்கியம்.
http://www.periva.proboards.com Source: Maha Periyavaal Darisana Anubhavangal – Part 4
As narrated by Sri V.Sundaram, Cuddalore
Contributed by Forum Member Shri Sankara Narayanan
natarajan
